தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா-? ப.சிதம்பரம் கேள்வி
வண்ணம் பூசுபவா் தவறி விழுந்து உயிரிழப்பு
தேனி அருகே தப்புக்குண்டில் வீட்டில் வண்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஏணியில் இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தப்புக்குண்டு கிழக்குத் தெருவைச் சோ்ந்த சீரங்குராம் மகன் பழனிராஜ் (55). இவா் அதே ஊரில் முருகேசன் என்பவரது வீட்டில் வண்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஏணியிலிருந்து இறங்கிய போது நிலைதடுமாறி கீழே விழுந்த பழனிராஜ், பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.