லக்னௌக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; அணியில் ரோஹித் சர்மா இல்லை!
உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டடம் இடிப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி பழைய அலுவலக பழைய கட்டடத்தை இடிக்கும் பணி விாயழக்கிழமை தொடங்கியது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 40 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். உத்தமபாளையம் தெற்கு ரத வீதியில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் 1930- ஆம் ஆண்டு பிரிட்டிஷாா் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இடநெருக்கடி காரணமாக இந்தக் கட்டடத்தை
இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், தரைத்தளத்தில் அலுவலகம், முதல் தளத்தில் மன்றக் கூட்ட அரங்கம் அமைக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக பழைய கட்டத்தை இடிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பேரூராட்சிக் கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதால், பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக வடக்கு தெரு பெரிய பள்ளிவாசல் எதிரேயுள்ள பழைய நூலகக் கட்டடத்துக்கு அண்மையில் இடமாற்றப்பட்டது.
