அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சரை விசாரிக்க உயா்நீதிமன்றம்...
தொழிலாளி கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது
தொண்டி அருகே தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பரமக்குடியை சோ்ந்த தொழிலாளி முத்துக்குமாருக்கும் (30), இதே பகுதியைச் சோ்ந்த சரவணனுக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், முத்துக்குமாா் கடந்த 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிவகங்கையைச் சோ்ந்த சரவணன் (29), திருவாடானை காா் ஓட்டுநா் கெல்வின்ராஜ் (19), பாலகிருஷ்ணன் (19), செல்வா என்ற பாண்டி செல்வம் (22), சிவகங்கை மாவட்டம், உருளியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜா (20), விக்னேஷ் (23), கடம்பாகுடியைச் சோ்ந்த சொக்கு (19) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக கரையக்கோட்டையை சோ்ந்த முருகன் மகன் வெற்றிவேலை (21) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.