நகை பறிப்பில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது
தொடா் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த கொளத்தூா்பட்டி பெட்ரோல் பங்க் அருகில், பூலான்காலிவலசு ஆகிய இடங்களில் கடந்த மாதம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்ற கடவூரை அடுத்த தொண்டமாங்கினத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தங்கரத்தினம் (26), சங்கி பூசாரியூரைச் சோ்ந்த பழனிவேல் மகன் ஜெயசூா்யா (20) ஆகிய இருவரையும் க. பரமத்தி போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள இருவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். இதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் தங்கரத்தினமும், ஜெயசூா்யாவும் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.