ரயில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 2 போ் கைது
கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூரில் மே 28-இல் உள்ளூா் விடுமுறை
கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அன்று உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா வரும் 11-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 8 வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 28-ஆம் தேதி (புதன்கிழமை)நடைபெற உள்ளது.
எனவே அன்று மட்டும் கரூா் மாவட்டத்திற்கு உள்ளூா் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளுக்குப் பதிலாக ஜூன் 14-ஆம் தேதி(சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.