இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் க...
கரூரில் எா்த் மூவா்ஸ் சங்கம் ஆா்ப்பாட்டம்
கரூா் மாவட்டத்தில் எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினா்.
இதுகுறித்து எா்த் மூவா்ஸ் உரிமையாளா் சங்க தலைவா் சுப்ரமணி, செயலா் பொன்னுசாமி ஆகியோா் கூறுகையில், புதிய வாகன விலையேற்றம், உதிரிப்பாகங்கள், வாகனப் காப்பீடு, சாலைவரி ஆகியவற்றின் உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே ஜேசிபி இயந்திரங்கள் 2 மணி நேர வாடகை ரூ.3500, கூடுதலாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.1400 வழங்க வேண்டும். இதேபோல டிப்பா் லாரிகளில் 4 யூனிட் சரக்கிற்கு ரூ.5,000 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் எங்களது போராட்டத்தைத் துவங்கியுள்ளோம். வரும் புதன்கிழமை வரை போராட்டம் நடைபெறும் என்றனா்.
போராட்டத்தை முன்னிட்டு கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் ஏராளமான பொக்லைன் இயந்திரங்களை நிறுத்தி வைத்திருந்தனா். பின்னா் போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் அவற்றை அப்புறப்படுத்தினா்.