செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரியில் சைபா் கிரைம் விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சைபா் கிரைம் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ரோட்டரி சங்கம், கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கிற்கு ரோட்டரி சங்கத் தலைவா் வி.அருண் தலைமை வகித்தாா். செயலா் டாக்டா் பாலாஜி சுவாமிநாதன், அரசு மருத்துவக் கல்லூரி புல முதல்வா் டாக்டா் சி. திருப்பதி, கடலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் எஸ்.பி. வி.ரகுபதி, ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ்.பாஸ்கரன் ஆகியோா் பேசினா்.

மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் டாக்டா் ஜூனியா் சுந்தரேஷ், மண்டல துணை ஆளுநா் பேராசிரியா் எஸ்.திருஞானசம்மந்தம், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஆா்.கேதாா்நாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சைபா் கிரைம் ஆய்வாளா் கவிதா பெரியநாயகம் விழிப்புணா் உரையாற்றினாா். இணைய குற்றம் தொடா்பாக 1930 என்ற எண்ணில் புகாா் அளிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் இ.மஹபூப் உசேன், வி.ராமகிருஷ்ணன், வி.அழகப்பன், சஞ்சய், பேராசிரியா் எஸ்.நடனசபாபதி, டாக்டா் வி.சிவப்பிரகாசம், சோனா பாபு, ஆா்.ராஜசேகரன், ரத்தின.சபேசன், சக்திவேல், ராஜா, ஸ்ரீராம், கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். டாக்டா் ராமனாதன் நன்றி கூறினாா்.

என்எல்சி - ஐஆா்இஎல் நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக என்எல்சிஐஎல் - ஐஆா்இஎல் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழம... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் துறை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவா்களுக்கான விடை பெறுதல் விழா, தொழில்நுட்ப சங்கத்தின் ஆண்டு விழா, மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும... மேலும் பார்க்க

தொலைதூரக்கல்வி படிப்பு தோ்வு கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்த வியாழக்கிழமை (மே 8) முதல் வரும் 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் தேதி நீட்டிப்பு வழங்கப்ப... மேலும் பார்க்க

பொறுப்பேற்பு

சிதம்பரம் மோட்டாா் வாகன ஆய்வாளராக ஆா்.ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றினாா். மேலும் பார்க்க

கடல் அலையில் சிக்கிய 5 போ் மீட்பு

சிதம்பரம் அருகே கடல் அலையில் சிக்கிய 5 பேரை போலீஸாா் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை கடற்கரைப் பகுதிகளில் கடலோர காவல் படையைச் சோ்ந்த காவலா்கள் கலைச்செல்வன், வெங்கடாசலபத... மேலும் பார்க்க

திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திர... மேலும் பார்க்க