செய்திகள் :

`நஞ்சாகும் மஞ்சள்' அதிகப்படியான லெட் கலப்பால் பாதிக்கப்படும் குழந்தைகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

post image

இந்தியா, பாகிஸ்தான், நேபால் ஆகிய நாடுகளில் கடைகளில் விற்கப்படும் மஞ்சளில் அளவுக்கு அதிகமான லெட் (ஈயம்) இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாட்னா, பாகிஸ்தானின் கராச்சி, பெஷாவார் நகரங்களில் ஒரு கிராம் மஞ்சளில் 1000 மைக்ரோ கிராம் அளவு லெட் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளனர். இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FASSAI) ஒரு கிராம் மஞ்சளில் 10 மைக்ரோகிராம் லெட் இருக்க அனுமதித்துள்ளது. இதற்கு அதிகமாக இருப்பது நச்சு. ஆனால் பல இடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது.

மஞ்சள்

இந்த ஆய்வுக்காக இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, நேபால் ஆகிய நாடுகளின் 23 நகரங்களில் கடைகளில் விற்கும் மஞ்சளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சோதனை முடிவுகள் சயின்ஸ் ஆஃப் தி டோடல் என்விரோன்மெண்ட் (Science of the Total Environment) இதழில் வெளியாகியிருக்கிறது.

அதிக அளவில் ஈயத்துடன் மஞ்சளை உட்கொள்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். எலும்பில் இருக்கும் கால்சியத்தைப் போல இருக்கும் லெட், முக்கியமாக குழந்தைகளைப் பாதிக்கக் கூடியது. அதிகபடியான லெட் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கும். நுண்ணறிவு வளர்ச்சியைத் தடுக்கும், இதய மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

Lead

இந்தியாவில் கௌஹாத்தி, பாட்னா ஆகிய நகரங்களில் அதிகப்படியான லெட் அளவு கண்டறியப்பட்டுள்ளது. பாலிஷ் செய்யப்பட்ட மஞ்சள் வேர்கள் மிக மோசமாக உள்ளன. அதைத் தொடர்ந்து மஞ்சள் தூள், பிராண்டட் மஞ்சள் தூள் மற்றும் சாதாரண வேர்கள் என அவற்றின் மாசுப்பாட்டின் அடிப்படையில் பட்டியலிடுகின்றனர்.

மஞ்சளில் லெட் சேர்க்கப்படுவது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் லெட் அளவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். உலக சுகாதார மையம் குறைந்த அளவு கூட லெட் உணவில் கலப்பதை பாதுகாப்பற்றதாகக் கருதுகின்றது. உலக அளவில் 80 கோடி குழந்தைகள் இரத்தத்தில் அதிகப்படியான லெட் கலந்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெயிண்ட் போன்ற பொருட்களில் கலக்கப்படும் நிறமியான லெட் க்ரோமேட் (Lead Chromate) மஞ்சளில் கலக்கப்படுவதுதான் இந்த சிக்கலுக்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மஞ்சள்

முன்னதாக பங்களாதேஷில் இரண்டாம் தர மஞ்சள் வேர்கள் தோற்றத்தில் பளபளப்பாக இருப்பதற்காக சில தாசாப்தங்களாக லெட் க்ரோமேட் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த மஞ்சள் வழங்கப்பட்ட பிராந்தியங்களில் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

தெற்காசியாவில் மஞ்சள் சப்ளை செய்யப்படும் அனைத்து பிராந்தியங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது ஆய்வாளர்கள் குழு!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?

சமீபத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளது. பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கும் அந்த அறிக்கையில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு ஊழ... மேலும் பார்க்க

Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் - நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks

இன்றைய ஜூவி பிரேக்ஸில்,வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்ந... மேலும் பார்க்க

Delhi : `1 ஓட்டு' வித்தியாசத்தில் மேயரான ஆம் ஆத்மி கவுன்சிலர் - பரபரப்பு தேர்தல்!

டெல்லி மாநகரக மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி தலைவர் மகேஷ் கிஞ்சிக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையே நெருக்கடியான போட்டி உருவானது. டெல்லியில் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 265. மேயர் பதவியைத் ... மேலும் பார்க்க

US: உளவுத்துறை இயக்குனராக `இந்து பெண்' தேர்வு செய்த ட்ரம்ப்... `துளசி கபார்ட்' பின்புலம் என்ன?

ட்ரம்ப் அரசில் தேசிய புலனாய்வு இயக்குநராக செயல்படவிருக்கிறார் துளசி கபார்ட். இத்தகைய உயர் பதவிக்கு வரும் முதல் இந்து - அமெரிக்கர் துளசிதான்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகையில் துளசியை 'F... மேலும் பார்க்க

இந்தியாவில் முதன்முறை: சிக்கும் ADMK முன்னாள் அமைச்சர்? | DMK | BJP | TVK VIJAY | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Intro: Children's day & Jawaharlal Nehru Birthday * லாட்டரி மார்ட்டினுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!* ஓ.பி.ஜி குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை... 8... மேலும் பார்க்க

Hijab: ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' அமைக்கும் ஈரான் அரசு!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற அரசின் கட்டுப்பாட்டை பெண்கள் ஏற்க மறுக்கின்றனர். இதற்காக ஹிஜாப் அணியாத பெண்களின் மனநிலையை சரி செய்யப்போவதாக சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது ஈரான் அரசு. இஸ்ல... மேலும் பார்க்க