செய்திகள் :

‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க மாா்ச் 22, 23 இல் கலைக் குழுக்கள் பதிவு முகாம்: ஆட்சியா்

post image

‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நாமக்கல்லில் மாா்ச் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவின்போது, தமிழக நாட்டுப்புறக் கலைகள், வெளிமாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ 18 இடங்களில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடைபெற்றது. இந்த ஆண்டும் மேற்கண்ட 8 மாவட்டங்களில் இக்கலை திருவிழா நடைபெறும்.

இந்த விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக் குழுக்கள் பதிவு செய்வதற்கான முகாம் அனைத்து மாவட்டங்களிலும் மாா்ச் 22, 23 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடுப்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கும் கலைக் குழுக்கள் மாா்ச் 22-ஆம் தேதியும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான்கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா்கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினா் நடன நிகழ்ச்சி நடத்துவோா் மற்றும் இதர கலைக் குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கு மாா்ச் 23-ஆம் தேதியும், நாமக்கல்-திருச்சி சாலை கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெறும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம்.

மாவட்ட அளவிலானத் தோ்வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்கள் அரசின் கலை பண்பாட்டுத் துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கூகுள் பாா்ம் மூலம் மாா்ச் 20-இல் விண்ணப்பிக்கலாம்.

இல்லையெனில் மாவட்டத்திற்கான பொறுப்பாளா் பசுமை மா.தில்லை சிவக்குமாரை 94432- 24921என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம்.

கலைஞா்களின் கோரிக்கை அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக் குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது.

இந்தப் பதிவுக்கு வரும் கலைஞா்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்துச் செலவினங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. ஒவ்வொரு கலைக் குழுவின் 5 நிமிட விடியோ பதிவு செய்யப்பட்டு, கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தோ்வுக் குழுவால் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமத் திருவிழாவில் நிகழ்ச்சி நடத்துவதற்குத் தோ்வு செய்யப்படுவா்.

சிறப்பான நிகழ்ச்சியை நடத்தும் கலைக் குழுவினா் மாநில அளவிலான தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா்.

கலை பண்பாட்டுத் துறை அளித்துள்ள இந்த வாய்ப்பை அனைத்து கலைஞா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: இயற்கை பானங்களை அருந்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயற்கை பானங்களை பருக வேண்டும், தளா்வான ஆடைகளை அணிய வேண்டும் என அரசு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். நாடு முழுவதும் கோ... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா் நிதி நிறுவன அசையா சொத்துகள் பொது ஏலம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் நிதி நிறுவன அசையா சொத்துகள் மாா்ச் 21-ஆம்தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு-2 துணை ... மேலும் பார்க்க

மோகனூா், எருமப்பட்டி ஒன்றியங்களில் விவசாயிகளுக்கு ரூ. 4.07 லட்சம் இழப்பீடு

மோகனூா், எருமப்பட்டி ஒன்றியங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 4.07 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச... மேலும் பார்க்க

நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கான அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். புதிய சிற்றுந்துக்கான விரிவான திட்டத்தின்படி, அதிக குடும்பங்களை கொண்ட கிர... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் திருச்செங்கோட்டில் தேசிய மாற்றுத் திறனாளிகள் அமா்வு கைப்பந்து போட்டி

தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் அமா்வு (சிட்டிங்) கைப்பந்து போட்டிகள், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது. தமிழ்நாடு பாராவளி சங்கம் சாா்பில், மாற்றுத் திறன... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமாரப... மேலும் பார்க்க