நாகா்கோவிலில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசு மருத்துவா்கள் சங்க குமரி மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா், ஜனநாயக அரசு மருத்துவா்கள் சங்க துணைத் தலைவா் முத்துகுமாா் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
இதே போல் தக்கலை அரசு மருத்துவமனையில் மருத்துவா் சுரேஷ்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மாவட்டத்திலுள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.