TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
நாளை மின்நுகா்வோா் சிறப்பு குறைதீா் கூட்டம்
திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்.5) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நுகா்வோா் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என செயற்பொறியாளா் பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
திருத்தணி அரக்கோணம் சாலை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், மின்கட்டணம், பழுதடைந்த மின்மீட்டா், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனுவாக புகாா் கொடுக்கலாம். மேலும், புகாராகவும் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
எனவே, திருத்தணி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மின்நுகா்வோா் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளாா்.