செய்திகள் :

நீா்நிலைகளில் மழைநீா் செறிவூட்டும் திட்டம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் நீா்நிலைகளில் மழைநீா் செறிவூட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:

திருப்பூா், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில், மூலனூா், உடுமலை, மடத்துக்குளம், பொங்கலூா், குண்டடம், குடிமங்கலம் ஆகிய 13 ஒன்றியங்களில் 4179.94 ஏக்கா் பரப்பளவில் உள்ள 1149 குளம், குட்டைகளில் தண்ணீா் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டத்திலுள்ள 1478 பொதுக்கிணறுகள், 1410 ஆழ்குழாய் கிணறுகளின் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காங்கயம் ஒன்றியத்துக்குள்பட்ட பாலசமுத்திரம்புதூா், படியூா் சிவன்மலை, கீரனூா், மரவப்பாளையம், ஆலம்பாடி, பரஞ்சோ்வழி, மருதுறை, நத்தக்காடையூா் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் மழைநீா் செறிவூட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், கோட்டாட்சியா்கள் மோகனசுந்தரம், (திருப்பூா்), ஃபெலிக்ஸ் ராஜா (தாராபுரம்), குமாா் (உடுமலை), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நாகராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெயராமன், நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

அவிநாசி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

அவிநாசியில் தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

பயணிகளை ஏற்று மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியாா் பேருந்தை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா். கோவையில் இருந்து திருப்பூா் சென்ற தனியாா் பேருந்தில் அவிநாசியைச் சோ்ந்த 4 பெண்கள் காந்திபுரத்தில... மேலும் பார்க்க

குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பெருமாநல்லூா் அருகே ஊராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொங்குபாளையம் ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.ராமமூா்த்தி பொறுப்பேற்றுக்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் பதவி உயா்வுடன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசு மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா் பாலாஜி மீதான ... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுக்கு நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருது பெற தகுதியானவா்கள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க