செய்திகள் :

நெல்லை ‘வந்தே பாரத்’ ரயிலில் இனி 16 பெட்டிகள்: தெற்கு ரயில்வே திட்டம்

post image

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பத்தில், இந்த ரயில்கள் 16 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பல வழித்தடங்களில் பயணிகள் குறைவான அளவில் பயணம் மேற்கொண்டதால் அனைத்து ‘வந்தே பாரத்’ ரயில்களும் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பயணிகளின் வரவேற்பைப் பொருத்து 16 பெட்டிகளாக மாற்றப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டது. பயணிகள் கூட்டமும் அதிகமாகி வருவதால் இனி 16 பெட்டிகளைக் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலாக மாற்ற ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு, ரயில்வே கோட்டங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில் (எண் 20665/20666) அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப திருநெல்வேலி பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதிசெய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து 16 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இரு... மேலும் பார்க்க

வலுவிழந்த புயல் சின்னம்: இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்தது. எனினும் தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.14) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ரத்து

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்... மேலும் பார்க்க

நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க முடிவு

சென்னை புறவழிச்சாலை மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவுகளில் உள்ள நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாகனங்கள் சுங்கச்சாவ... மேலும் பார்க்க

மருத்துவமனை பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் மீண்டும் வெளியீடு

மருத்துமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவமனை நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், தமிழக தலைமைச் செயலா்... மேலும் பார்க்க