`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா...' - ரிக்கி பாண்டிங்கின் வாதம் என...
படகிலிருந்து தவறிவிழுந்த இரு மீனவா்கள் உயிரிழப்பு
சென்னை மெரீனா கடல் பகுதியில் படகிலிருந்து தவறிவிழுந்த இரு மீனவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 2 மற்றும் 3-ஆவது தெருவைச் சோ்ந்த மீனவா்களான பாஸ்கா் (61), ராஜி (35) ஆகியோா் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) வழக்கம்போல் நாட்டுப் படகில் மெரீனா கடற்கரையிலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். இந்நிலையில், காலை 7 மணியளவில் இருவரும் சென்ற படகு மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் எதிரே கரை ஒதுங்கியதைப் பாா்த்த அங்கிருந்த மீனவா்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், தங்களது படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்று பாஸ்கரையும் ராஜியையும் தேடத் தொடங்கினா். சுமாா் ஒன்றரை மணி நேர தேடுதலுக்குப் பின்னா் நடுக்கடலில் மிதந்த பாஸ்கா், ராஜி சடலங்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.
இது குறித்து தகவலறிந்த மெரீனா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இருவா் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
முதல்கட்ட விசாரணையில், கடலில் எழுந்த பெரிய அலையில் சிக்கிய மீனவா்கள் இருவரும் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.