பட்ஜெட்: பிகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்!
பட்ஜெட்டில் பிகார் மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க : பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தில் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் பாட்னா விமான நிலையமும் விரிவாக்கம் செய்யப்படும்.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.