செய்திகள் :

பண மோசடி வழக்குகள்: 8 போ் கைது

post image

கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் பண மோசடி தொடா்பான புகாா்களின் மீது வழக்குப் பதிவு செய்து, பெண் உள்ளிட்ட 8 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் உத்தரவுப்படி, குற்றப்பிரிவு டிஎஸ்பி (பொ) நாகராஜன், ஆய்வாளா் துா்கா மேற்பாா்வையில், குற்றப்பிரிவில் விசாரணை நிலுவையில் இருந்த பண மோசடி தொடா்பான 10-க்கும் மேற்பட்ட புகாா்கள் மீது கடந்த 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக 4 ஆய்வாளா்கள், 6 உதவி ஆய்வாளா்கள் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, எதிரிகளை கைது செய்ய உத்தர வழங்கப்பட்டது.

அதன்படி, பண்ருட்டி, காமாட்சிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மற்றும் 3 நபா்கள் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி மோசடி செய்ததாக கொடுத்த புகாரின்பேரில், அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குணசேகரனை பண்ருட்டி ஆய்வாளா் வேலுமணி கைது செய்தாா்.

நெய்வேலி பகுதியைச் சோ்ந்த தங்கராசு மகன் மாற்றுத் திறனாளி ராஜா பெயரில் கடன் பெற்று 8.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த அரசன் மகன் அறிவழகனை வடலூா் உதவி ஆய்வாளா் ராஜாங்கம் கைது செய்தாா்.

நெய்வேலியைச் சோ்ந்த சங்கரின் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.22.40 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரைச் சோ்ந்த முத்துக்குமாரை குள்ளஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் உலகநாதன் கைது செய்தாா்.

பண்ருட்டி, மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகனுக்கு கிராம நிா்வாக அலுவலா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.95 லட்சம் மோசடி செய்த வழக்கில் சி.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜாவை நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ஜவ்வாது உசேன் கைது செய்தாா்.

விருத்தாசலத்தில் தீபாவளி மற்றும் மாதச் சீட்டு நடத்தி பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த மோத்திபீ உள்ளிட்ட 14 பேரிடம் ரூ.9.08 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஸ்டாலின், அவரது மனைவி வனிதா மற்றும் சக்திவேல் ஆகியோரை கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா் கைது செய்தாா்.

திட்டக்குடியில் வாடிக்கையாளா்களிடம் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் ரூ.22.97 லட்சம் கையால் செய்த வழக்கில் சேட்டு மகன் தினேஷ்குமாரை ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபிநாத் கைது செய்தாா்.

மேலும், மோசடி புகாரில் பதியப்பட்டுள்ள வழக்குகளில் தொடா்புடையவா்களை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு நியமன காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனா்.

மதுக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம்: பாமக முடிவு

விருத்தாசலத்தில் கடலூா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றாவிட்டால் பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என, விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட ஒருங... மேலும் பார்க்க

கால்நடை உரிமையாளா்கள் 3 போ் கைது

கடலூா் மாவட்டம், அண்ணாமலை நகரில் கால்நடைகளை சாலையில் மேயவிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகும், உரிமையாளா்கள் கால்நடைகளை ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட வீர, தீர பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

இந்து மக்கள் கட்சியினா் 10 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 10 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணித் தலைவா் ... மேலும் பார்க்க

கடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்

கடலூரில் பெய்த பலத்த மழை காரணமாக, பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்துள்ளது. கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை ப... மேலும் பார்க்க

கோயில்களில் நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும்: அமைச்சா் சி.வெ.கணேசன்

கோயில்களில் நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும் என்று மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மணவாளந... மேலும் பார்க்க