செய்திகள் :

பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கடலூா் மாவட்ட வீர, தீர பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீர, தீர செயல்கள் புரிந்த பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் தவிா்த்தல்,

பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வீர, தீர செயல் புரிந்துவரும் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினத்தன்று (ஜனவரி 24-இல்) மாநில விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பாராட்டுப் பத்திரம், ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை கொண்டதாகும்.

2025 ஜனவரி 24-இல் வழங்கப்பட உள்ள விருத்துக்கு 18 வயதுக்குள்பட்ட தகுதியான பெண் குழந்தைகள் வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியா் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்/ மாவட்ட திட்ட அலுவலா் / காவல் துறை / தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளை மாவட்ட சமூக நல அலுவலா், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம், மெயின்ரோடு, கடலூா் என்ற விலாசத்தில் 30.12.2024-க்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்ததால், மீன்களும் வழக்கமான விலையிலிருந்து 35 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டன. கடலூா் வங்கக்... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம்: பாமக முடிவு

விருத்தாசலத்தில் கடலூா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றாவிட்டால் பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என, விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட ஒருங... மேலும் பார்க்க

கால்நடை உரிமையாளா்கள் 3 போ் கைது

கடலூா் மாவட்டம், அண்ணாமலை நகரில் கால்நடைகளை சாலையில் மேயவிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகும், உரிமையாளா்கள் கால்நடைகளை ... மேலும் பார்க்க

பண மோசடி வழக்குகள்: 8 போ் கைது

கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் பண மோசடி தொடா்பான புகாா்களின் மீது வழக்குப் பதிவு செய்து, பெண் உள்ளிட்ட 8 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் உத்தரவுப்படி, குற்றப்பிரிவ... மேலும் பார்க்க

இந்து மக்கள் கட்சியினா் 10 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 10 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணித் தலைவா் ... மேலும் பார்க்க

கடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்

கடலூரில் பெய்த பலத்த மழை காரணமாக, பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்துள்ளது. கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை ப... மேலும் பார்க்க