செய்திகள் :

பண்ணைக்காடு அருகே சாலை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

post image

கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் சாலையோரப் பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் அரசு மருத்துவமனை, கிளை நூலகம் செல்லும் சாலையில் கால்வாய் அமைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பள்ளத்தை மூடுவதற்கும், சேதமடைந்த இந்தச் சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, கொடைக்கானல் பேருந்து நிலையம் எதிரேயுள்ள கால்வாய் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

போலீஸாா் பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சே.தும்மலப்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி தூக்கிட்டுத் தற்கொலை

செம்பட்டி அருகே போக்சோ வழக்கில் கைதாகி போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்ற விசாரணைக் கைதி, திங்கள்கிழமைதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடியைச் சே... மேலும் பார்க்க

சின்னாளபட்டியில் சிறுவா் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டத்தில் சிறுவா் பூங்கா அமைத்துத் தர வேண்டுமென உறுப்பினா் வலியுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

நூற்பாலை பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் அருகே நூற்பாலையில் பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்... மேலும் பார்க்க

பழனியில் அசுத்தமான குடிநீா் விநியோகம்

பழனி நகராட்சியில் குடிநீா் கருமை நிறத்துடன் அசுத்தமாக வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா் புகாா் தெரிவித்தாா்.பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உற... மேலும் பார்க்க

காய்கறிச் சந்தை அருகே கழிவுநீா் தேங்கியதால் சுகாதாரக்கேடு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு தினசரி ஆயிரக்கணக்கனோா் வந்து செல்கின்றனா். இந்தச் ச... மேலும் பார்க்க