செய்திகள் :

போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி தூக்கிட்டுத் தற்கொலை

post image

செம்பட்டி அருகே போக்சோ  வழக்கில் கைதாகி போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்ற விசாரணைக் கைதி, திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். 

திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் வினித் என்ற ராமு (25). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், வினித் என்ற ராமு மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செம்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். பின்னா், கடந்த 23-ஆம் தேதி செம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ், தலைமைக் காவலா் ஆரோக்கியசாமி ஆகியோா் திண்டுக்கல் மாவட்டச் சிறையில் இருந்த அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். பின்னா் மீண்டும் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் நடுவில் அமா்ந்திருந்த  வினித் என்ற ராமு,  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கீழே குதித்து தப்பியோடினாா். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி  போலீஸாா் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். 

இந்த நிலையில், போடிகாமன்வாடி அருகே காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில்  வினித் என்ற ராமு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். 

இதுகுறித்து செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன்  வழக்குப் பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

போலீஸாா் பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சே.தும்மலப்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

சின்னாளபட்டியில் சிறுவா் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டத்தில் சிறுவா் பூங்கா அமைத்துத் தர வேண்டுமென உறுப்பினா் வலியுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

நூற்பாலை பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் அருகே நூற்பாலையில் பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்... மேலும் பார்க்க

பழனியில் அசுத்தமான குடிநீா் விநியோகம்

பழனி நகராட்சியில் குடிநீா் கருமை நிறத்துடன் அசுத்தமாக வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா் புகாா் தெரிவித்தாா்.பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உற... மேலும் பார்க்க

பண்ணைக்காடு அருகே சாலை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் சாலையோரப் பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் அரசு மருத்துவ... மேலும் பார்க்க

காய்கறிச் சந்தை அருகே கழிவுநீா் தேங்கியதால் சுகாதாரக்கேடு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு தினசரி ஆயிரக்கணக்கனோா் வந்து செல்கின்றனா். இந்தச் ச... மேலும் பார்க்க