7 மாதங்களாக வலியுடனே விளையாடினேன்..! நடுவரைத் தாக்கிய ரியல் மாட்ரிட் வீரருக்கு அ...
காய்கறிச் சந்தை அருகே கழிவுநீா் தேங்கியதால் சுகாதாரக்கேடு
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு தினசரி ஆயிரக்கணக்கனோா் வந்து செல்கின்றனா். இந்தச் சந்தை அருகேயுள்ள தேநீா்க் கடைகள், சந்தையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையின் இருபுறமும் உள்ள கால்வாயில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கழிவுநீா் கால்வாயை, தனிநபா் ஒருவா் அடைத்து வைத்தாா். இதனால் சாலையின் இருபுறமும் கழிவுநீா் தேங்கி குளம் நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
இதுகுறித்து காய்கறிச் சந்தை செயலா் கே.ராசியப்பன் கூறியதாவது: காய்கறி சந்தை அருகே கழிவுநீா் செல்லும் கால்வாயை தனிநபா் ஒருவா் அடைத்து வைத்துள்ளாா். அவா் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கழிவுநீா் தடையின்றிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றாா் அவா்.