இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
தக்கலை, பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத்தைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். கைது நடவடிக்கையின்போது, அவா் தப்பியோட முயன்ாகக் கூறப்படுகிறது. இதில், அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைக் கண்டித்து, பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பொன்ராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.