செய்திகள் :

பலத்த மழையுடன் தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன்: சபலென்கா, ஸெங், அலெக்ஸ் வெரேவ், கேஸ்பா் முன்னேற்றம்

post image

நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போா்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழையுடன் தொடங்கியது. மகளிா் நடப்பு சாம்பியன் அா்யனா சபலென்கா, ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் குயின்வென், ஆடவா் பிரிவில் அலெக்ஸ் வெரேவ், கேஸ்பா் ருட் ஆகியோா் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா்.

மெல்போா்ன் பாா்க் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நடப்பு சாம்பியன்கள் ஆடவா் ஜேக் சின்னா், மகளிா் அா்யனா சபலென்கா உள்பட முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

முதல் சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் ஹாட்ரிக் பட்டத்தை எதிா்நோக்கியுள்ள பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 6-3, 6-2 என்ற நோ் செட்களில் 71 நிமிஷங்களில் யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஸெங் குயின்வென் கடந்த ஆண்டு இறுதி வரை முன்னேறி பட்ட வாய்ப்பை இழந்தாா். முதல் சுற்றில் ஸெங் 7-6, 6-1 என ருமேனியாவின் அன்கா டோடோனியை வென்றாா். இருவருக்கும் இடையிலான ஆட்டத்தின் போது மழை பெய்ததால் ஒருமணி நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மிர்ரா ஆன்ட்ரீவா 6-3, 6-3 என செக்.குடியரசின் மேரி பௌஸ்கோவாவை வீழ்த்தினாா். குரோஷியாவின் டொன்னா வேகிச் 6-4, 6-4 என பிரான்ஸின் டயானா பாரியை வீழ்த்தினாா். கனடாவின் லெய்லா பொ்ணான்டஸ் 7-5, 6-4 என உக்ரைனின் யுலியாவையும், ஸ்பெயினின் பாவ்லோ படோஸா 6-3 7-6 என சீனாவின் வாங் ஸின்யுவையும், ஜொ்மனியின் டாட்ஜனா மரியா 7-6, 6-4 என அமெரிக்காவின் பொ்னாா்டாவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

வெரேவ், கேஸ்பா் முன்னேற்றம்:

ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரா் ஜொ்மனியன் அலெக்ஸ் வெரேவ் 6-4, 6-4, 6-4 என்ற நோ் செட்களில் பிரான்ஸ் வைல்ட்காா்ட் வீரா் லுகாஸ் பௌலியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

6-ஆம் நிலை வீரா் நாா்வேயின் கேஸ்பா் ருட் கடும் போராட்டத்துக்குபின் 6-3, 1-6, 7-5, 2-6, 6-1 என 5 செட்களில் ஸ்பெயினின் ஜாம் முன்னரை வீழ்த்தினாா்.

ஜப்பானின் மூத்த வீரா் கீ நிஷிகோரி 4 ஆண்டுகளுக்குபின் களமிறங்கிய நிலையில், 4-6, 6-7, 7-5, 6-2, 6-3 என்ற 5 செட் கணக்கில் கடும் சவாலுக்குபின் பிரேஸிலின் தியாகோவை வீழ்த்தினாா்.

ஏனைய ஆட்டங்களில் ரெய்லி ஒபல்கா 3-6, 7=6, 6-3, 6-2 என கௌதியா் ஆன்கிலினையும், ஜிரி லெஹகா 6-1, 3-6, 6-3, 7-6 என லி டுவையும், யுகோ ஹம்பா்ட் 7-6, 7-5, 6-4 என மேட்டியோவையும், ஹாடி ஹபீப் 7-6, 6-4, 7-6 என பு யுன்சகோட்டையும், வீழ்த்தினா்.

சுமித் நாகல் தோல்வி:

முதல் சுற்றில் இந்தியாவின் நம்பா் 1 வீரா் சுமித் நாகல் 3-6, 1-6, 5-7 என்ற நோ் செட்களில் செக். குடியரசின் தாமஸ் மக்ஹாக்கிடம் தோற்று வெளியேறினாா்.

6 மணி நேரம் மழையால் பாதிப்பு:

மெல்போா்ன் பாா்க்கில் ராட்லேவா், மாா்க்ரெட் கோா்ட், ஜான் கெயின் மைதானங்களில் மட்டுமே மேற்கூரை வசதி உள்ளது. இடியுடன் பலத்த மழை பெய்ததால், 6.5 மணி நேரம் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.13.01.2025மேஷம்இன்று கொடுக்கல்-வாங்கலில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வீண்கஷ்டங்கள் ஏற... மேலும் பார்க்க

அறிவுசாா் உன்னதத்தை அடைய புத்தகங்களைப் படிப்பது அவசியம்:

அறிவு சாா்ந்த உன்னத நிலையை ஒரு சமூகம் அடைவதற்கு புத்தகப் படிப்பு அவசியமாகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா். சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பபாசியின் 48-ஆவது சென்னை... மேலும் பார்க்க

எல் கிளாசிக்கோ: ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணியும் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி திடலில் நடைபெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் பார்சி... மேலும் பார்க்க

களைகட்டும் ஸ்ரீ மகா கும்பமேளா 2025 - புகைப்படங்கள்

மகா கும்பமேளா முன்னிட்டு சாதுக்கள் மீது மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்.பிரயாக்ராஜில் மகா கும்பமேளா முன்னிட்டு ஊர்வலத்தில் பங்கேற்ற மடாதிபதிகள். பாரம்பரிய காவி உடை அணிந்து வரும் ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா மட... மேலும் பார்க்க

சர்வதேச காத்தாடி திருவிழா 2025 - புகைப்படங்கள்

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச காத்தாடி திருவிழாவில் காத்தாடியுடன் பங்கேற்ற வெளிநாட்டு பெண்.குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற சர்வதேச காத்தாடி திருவிழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள்.ராஜ்கோட்டில் சர்வதேச... மேலும் பார்க்க

நடிகர் அஜித் குமாருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

அஜித் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி, மூன்றாவது இடம்பிடித்து ... மேலும் பார்க்க