ஐபிஎல் மெகா ஏலம்: அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது பஞ்சாப்!
பள்ளிக் கட்டடம் காணொலி மூலம் திறப்பு
தேனி மாவட்டத்தில் ரூ. 275.88 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம், ஆய்வகங்களை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சின்னமனூா் அருகேயுள்ள அப்பிபட்டி ஊராட்சியில் ரூ. 190.76 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம், ஆய்வகமும், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 42.36 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகளும், கூடலூா் அருகே லோயா் கேம்ப்பில் ரூ.42.76 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகளை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிலையில், அப்பிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்தாா். கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பின்னா், பள்ளி மாணவா்களின் வருகைப் பதிவு, கல்வித்தரம் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனா்.
இதில் மாவட்ட கல்வி அலுவலா் இந்திர ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.