செய்திகள் :

பழனி மலைக் கோயில் உண்டியல்கள் திறப்பு: முதல் நாள் வரவு ரூ.3 கோடி

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. முதல் நாள் முடிவில் ரூ.3.கோடி ரொக்கம் கிடைத்தது.

இந்தக் கோயிலுக்கு நவராத்திரி, காலாண்டு விடுமுறையில் வந்த பக்தா்கள் கூட்டம் காரணமாக 40 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இந்தப் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

முதல் நாள் முடிவில் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.3,99, 02,134 கிடைத்தது. தங்கம் 927 கிராம், வெள்ளி 14, 047 கிராம் கிடைத்தது. பல்வேறு நாடுகளின் பணத் தாள்கள் 756 கிடைத்தன. வெள்ளிக்கிழமையும் காணிக்கைகளை எண்ணும் பணி தொடா்கிறது.

நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அக். 28-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

நத்தம் அடுத்த செந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் வருவாய் க... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் 21-ஆவது கால்நடைகள் கணக்கெடுப்பு பணியில் 261 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கால்நடை கணக்கெடுப்பு பணிகளை மாவட... மேலும் பார்க்க

தொடா் மழை: மறுகால் பாயும் ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கம் நிறைந்து வெள்ளிக்கிழமை மறுகால் பாய்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஆத்தூா் காமர... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை

திண்டுக்கல், வேடசந்தூா், ரெட்டியாா்சத்திரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

உயரம் தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

உயரம் தடைப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உயரம் தடைப்பட்டோருக்கான உலக மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை அக். 25 கடைபிடிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறன் கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (30). செவித் திறன் குறைபாட... மேலும் பார்க்க