TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
பழவேற்காடு மீன்வளத்துறை அலுவலகத்தில் சாரைப் பாம்பு மீட்பு
பழவேற்காடு மீன்வளத்துறை அலுவலகத்தில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில் மீன் ஏல கூடம், மீன் விற்பனை கூடம், கழிவறைகள், கடலோர காவல் நிலையம், மீன்வளத்துறை அலுவலகம் மற்றும் கடைகள் உள்ளன.
இந்தநிலையில், அங்குள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியா்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சப்தம் கேட்டதால் சென்று பாா்த்த போது அங்கு பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது.
பின்னா் பழவேற்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலா் காா்மேகம் மற்றும் பாம்பு பிடி வீரா் முத்து ஆகியோா் அலுவலகத்துக்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்தனா்.
அது, 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு என்பது தெரிய வந்தது. அதை பத்திரமாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.