தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
பழுதடைந்த காலனி வீடுகளை புதுப்பித்துத் தரக் கோரிக்கை
திருவாரூா்: குடவாசல் அருகே சறுக்கை பகுதியில் பழுதடைந்த காலனி வீடுகளை புதுப்பித்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் அருகே சறுக்கை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கிளைச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் வை.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ.டேவிட்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சறுக்கை கிராமத்தில் பழுதடைந்து காணப்படும் காலனி வீடுகளை புதுப்பித்து, வாழத் தகுதி உடைய குடியிருப்புகளாக உருவாக்க வேண்டும், அனைவருக்கும் பயன்படும் வகையில் மயானக்கரையில் மேற்கூரையுடன் கூடிய ஈமக் கிரியை மேடை அமைக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, முடிக்கப்படாத நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை கட்டி முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், மேலத்தெரு, ரோட்டு தெரு குடியிருப்புகளில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும், கிராமத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.