செய்திகள் :

பாகிஸ்தான்: மலைப்பகுதியில் அதிவேகப் பயணம்! வேன் கவிழ்ந்து 16 பேர் பலி!

post image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.

சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி எனும் பழங்குடியின மக்கள் நேற்று (ஏப்.21) ஒரு வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அந்நாட்டு அதிகாரிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் பலரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகவும் இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

முன்னதாக, இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பலூசிஸ்தான் மாகாணத்தில் நெல் அறுவடைப் பணிக்காகச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் பெரும்பாலான சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததினால் அந்நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு!

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியா... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக ஏப். 25-ல் இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறி... மேலும் பார்க்க

ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மரியாதை செலுத்தினார். தொழில் சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ர... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதிய உயர்வு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப... மேலும் பார்க்க

மணிப்பூர்: 4 கிளர்ச்சியாளர்கள் கைது! நவீன வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 4 கிளர்ச்சியாளர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். கிழக்கு இம்பால் மாவட்டத்தின் நாவோரெம் பிராஹரி கல்லூரிக்கு அருகில் சமீபத்தில் இ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹால்காம் பகுதியில் குதிரைகள் அல்லது நடத்து மட்டுமே செல்லக்கூடிய பைசரன... மேலும் பார்க்க