திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
பாலின ஆற்றல் அறியாமல் திருமணம் செய்யலாமா?
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்.. ஆண், பெண்ணை இணைக்கும் பெற்றோர்கள் பத்துக்கு எத்தனைப் பொருத்தம் என்று பார்க்காமல் ஒருசில முக்கிய விஷயங்களையும் தெரிந்துகொள்வது அவசியம்.
சரி, நேராக விஷயத்திற்கு வருவோம்.. ஆண்மைக் குறைவுள்ள ஜாதகம் எப்படி இருக்கும்? திருமணம் செய்வதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று என்கிறது ஜோதிடம்.
புதன், லக்கினம் மற்றும் இயற்கை பாவிகளுக்கு இடையில் இருப்பது 8 ஆம் இடத்தில் இருப்பது, ஆணின் களத்திர காரகரான சுக்கிரன் 6ஆம் இடத்தில் இருப்பது, 7ஆம் அதிபதி 6ல் இருப்பது இதுபோல் பல விதிகள் இருப்பினும், இங்கே காணும் உதாரண ஜாதகத்திற்கு இதுவேபோதுமானது.
இந்த ஜாதகத்தில் புதன் 8 ஆம் இடத்து அதிபதியாகி , 7 ஆம் அதிபதியான சுக்கிரனுடன் 6இல் உள்ளதை அறிய முடிகிறது. இந்த ஜாதகத்தை திருமணத்திற்குப் பார்த்தவர்கள் 10 பொருத்தமும் உள்ளது என்று கூறி திருமணம் செய்து விட்டனர். திருமணம் ஆன சில தினங்களுக்குள், இது அவரின் மனைவிக்குத் தெரிந்ததும் தாம் அணிந்து வந்த நகை, வெள்ளி பொருள்களை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றவர் திரும்பவே இல்லை. மேலும் சட்ட ரீதியாக தனது கணவரையும், அவரது பெற்றோரையும் சந்திக்கத் தயாராகி இப்போது சில கோடிகளைக் கேட்டு வழக்காடு மன்றம் சென்றுள்ளார்.
இருவீட்டாரும் எல்லாவற்றிலும் அதிக செல்வாக்கு உள்ளவர்கள் தான் இருப்பினும் நடந்ததோ வேறு. பணத்தால் அனைத்தையும் வாங்கிவிட முடியாது என்பது இச்செயலால் அறியலாம். இரு குடும்பத்திலும் மனவேதனை, பெண்ணிற்கு அவமானம், ஆணின் நிலை அரசல் புரசலாக வெளியே தெரிந்து, வெட்டவெளிச்சம் ஆனது தான் மிச்சம். முதலிலேயே தக்க மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தால், ஓரளவு பிரச்னை பற்றி எதிர்கொண்டு இருக்கலாம். இங்குதான் ஜோதிடம் நமக்கு தக்க நிலையை அறிந்து பிரச்னையை தெளிவாகக் கூறும். ஜோதிடம் முடிவு அல்ல, அது முன்னெச்சரிக்கை செய்யும் என்பதை அறிதல் வேண்டும்.
இதையும் படிக்க: இளவயது திருமணமும், தாமத திருமணமும் ஏன்?
இதுதான் இன்றைய நிலை. காரணம் நிறைய உள்ளது. வெகு காலம் காத்திருந்து, பல்வேறு அம்சங்களைப் பிடித்துப் போய் அவசரத்தில் திருமணம் செய்யும்போது இதுபோன்ற நிகழ்வுகளுக்கான பஞ்சமே இல்லை. 6 ஆம் வீடு பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகள் இருக்கவே செய்யும். இதை நாம் ஏற்கெனவே "பெண்கள் வெறுத்து ஒதுக்கும் ஆண் ஜாதக அமைப்பு " எனும் தலைப்பில் கவனித்திருக்கலாம்.
கால புருஷ தத்துவத்தின் படியான இரண்டாம் வீட்டு (ரிஷப ராசி) அதிபதி குடும்பம் அமைக்க வேண்டிய அதிபதி தனது விரைய ஸ்தானமான மேஷத்தில் இருப்பதையும் கவனிக்கும் போது குடும்பம் அமையவேண்டியது அமையாமல் போனதை, விரையமானதை மேலும் பல விரையங்களுக்கு ஆட்படுதலைக் கவனிக்கவே முடிகிறது.
பெண்ணின் ஜாதகம் நன்றாகவே உள்ளது. ஒரு விஷயம் இருவருக்கும் 4ஆம் இடத்தில் கேது. ஆணிற்கு கால புருஷ தத்துவத்தின் படி 4ல் கேது, பெண்ணிற்கு லக்கினத்திற்கு 4ல் கேது. சுகம் குறைவு. அது வேறு ஏதாகினும் காரணமாக இருக்க வாய்ப்பு. வேலை விஷயமாக வெகு தொலைவில் இருப்பது, பணியில் நேரம், காலம் மாற்றம் இருப்பது போன்று இருக்க வாய்ப்பு. ஆனால், இந்த இரு ஜாதகத்தை, எவ்வாறு சேர்த்தார்கள் என தெரியவில்லை. கிரக பொருத்தம் மட்டுமே சால சிறந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதையும் படிக்க: பங்குச்சந்தை யாருக்கெல்லாம் கைக்கொடுக்கும்?
இது காதல் திருமணமும் இல்லை. இதற்கு, 2, 5, 7, 11 பாவங்கள் எப்படியாவது தொடர்பு பெற்றிருக்க வேண்டும். இதில் 8 திருமணத்திற்கான சண்டை சச்சரவு. காரணம் அஷ்டமாதிபதி தொடர்பு காதல் தடை, முறிவு. 12 தொடர்பு காதல் தோல்வி அல்லது வீட்டிற்குச் சொல்லாமல் வெளியேறி திருமணம் செய்துகொள்வது. லக்கின அதிபதி 7ல் இருந்தால் ஜாதகர் தமது துணையைத் தேடிச் செல்வார். 7ஆம் அதிபதி ஜாதகத்திலிருந்தால், துணை ஜாதகரை தேடி வரும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.
மேற்படி, ஆணின் ஜாதகத்தில் காதலுக்கு இடம் இல்லை என அறிய முடிகிறது. பெண் ஜாதகத்தில் காதலுக்கு இடம் இருந்து பின்னர் அதுதொடர காதல் முறிவுக்கு வாய்ப்பாக உள்ளது. இதுபோன்று விஷயங்களை, சில ஜோதிடர்கள் திருமணத்திற்கு முன்னரே பெற்றோருக்கு தெரிவிப்பதால், அவர்கள் தயார் ஆவதும், காதலிக்கும் இரு வீட்டார்களும் சரியாக தெரிந்து, புரிந்து நடந்துகொள்ள வழிவகுக்கும். பெற்றோரும் அவர்களை ஏற்கும் மனப் பக்குவத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
இங்கு கூறவேண்டிய முக்கியமான விஷயம்.. காந்தர்வ திருமணம் எனும் காதல் திருமணத்திற்கு நிச்சயம் ஜோதிடம் தடையில்லை. தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம் ஜோதிடம் தடுக்காது. காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் இருவரும் வந்து கேட்கும்போது அப்போதைய அவர்களின் திருமணம் தவிர்த்த கேள்விகளுக்குத் தக்க பதில் அளிக்க ஜோதிடர் கடமைப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: 98407 17857