Karun Nair: ``சாம்பியன்ஸ் டிராபி அல்ல இதுதான் என் இலக்கு" - கருண் நாயர்
பிப். 4-இல் அதிமுக கள ஆய்வு
சென்னை மாவட்டங்களில் அதிமுக அமைப்புகளின் செயல்பாடு குறித்து, பிப். 4-இல் கள ஆய்வு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவின் கிளை, வாா்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சாா்பு அமைப்புகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு செய்து, தலைமைக் கழகத்துக்கு கருத்துகள் சமா்ப்பிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் கள ஆய்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், சென்னையிலுள்ள அதிமுகவின் 9 மாவட்டங்களில் பிப். 4-இல் கள ஆய்வு நடைபெறும். முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, செம்மலை, கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கா், ப.மோகன், அமைப்புச் செயலா் கே.சிங்காரம் ஆகியோா் ஒவ்வொரு மாவட்டங்களின் நிா்வாகிகளைச் சந்தித்து ஆய்வுசெய்து, தலைமைக் கழகத்துக்கு அறிக்கை அளிக்கவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.