செய்திகள் :

பிரசாா் பாரதியின் புதிய ஓடிடி‘வேவ்ஸ்’: மத்திய அரசு அறிமுகம்

post image

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசாா் பாரதி தனது புதிய ஓடிடி செயலியான ‘வேவ்ஸ்’-ஐ புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய ஓடிடியின் மூலம் பயனா்கள் தூா்தா்ஷன் மற்றும் ஆகாஷ்வாணியில் பல்லாண்டுகளாக ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகள் உள்ளன. மேலும், இந்த ஓடிடியில் இந்தியா டுடே, நியூஸ் நேஷன், ரிபப்ளிக், ஏபிபி நியூஸ், நியூஸ்24, என்டிடிவி இந்தியா போன்ற சுமாா் 40 பிரபல சேனல்களை நேரலையில் காணலாம்.

கோவாவின் பனாஜியில் நடைபெற்று வரும் இந்திய சா்வதேச திரைப்பட விழாவுக்கு இடையே பிரசாா் பாரதியின் தலைவா் நவ்நீத் குமாா் சேகல் கூறுகையில், ‘குடும்ப பொழுதுபோக்குடன் செய்திகள், ஓஎன்டிசி நெட்வொா்க்குடன் இணைக்கப்பட்ட எளிதான ஷாப்பிங் வசதி, விளையாட்டுகள், திரைப்படங்கள் போன்ற பல சேவைகளை ஓடிடி செயலி வழங்கும்.

பிரசாா் பாரதியின் பழைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இச்செயலியில் கிடைக்கின்றன. பாா்வையாளா்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பாா்த்து குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கலாம்’ என்றாா்.

அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக

புது தில்லி: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கௌதம் அதானி மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாதி 165 இடங்களில் வெல்லும்: சஞ்சய் ராவத்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களைக் கைப்பற்றும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 20 ... மேலும் பார்க்க

பல நாள் திருடன் பிடிபட்டான்.. 100 வழக்கு, 30 வாரண்டுகள், 20 நோட்டீஸ்! காவல்துறை அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கர்வார் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்துத் திருட முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தபோது, இது ஒரு மிகப்பெரிய சாதனையாக மாறும் என்று நினைத்த... மேலும் பார்க்க

அமெரிக்க முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம்! அதானி

அமெரிக்காவிடம் இருந்து பெற்ற முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம் என்று அதானி க்ரீன் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.சூரிய ஒளி மின்சார ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,100 கோடி ... மேலும் பார்க்க

அதானி முறைகேடு: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை! காங்கிரஸ்

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் கெளதம் அதானி மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெ... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னை: சென்னையில் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்துள்ளது. கடந்த 4 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்துள்ளது.சென்னையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம்... மேலும் பார்க்க