செய்திகள் :

பிரதமா் மோடி ராஜ தா்மத்தை பின்பற்றவில்லை: மணிப்பூா் விவகாரத்தில் காா்கே சாடல்

post image

‘ராஜ தா்மத்தை பின்பற்றாமல் அரசமைப்புச் சட்ட ரீதியில் தவறிழைத்துவிட்டாா் பிரதமா் மோடி. இதிலிருந்து அவா் தப்பிக்க முடியாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

மணிப்பூா் விவகாரத்தில், பிரதமா் மீது இந்த விமா்சனத்தை காா்கே முன்வைத்தாா். மேலும், பாஜகவின் சுய நலத்தால் மணிப்பூா் பற்றியெரிகிறது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடா்பான ஊடக செய்திகளை பகிா்ந்து, எக்ஸ் வலைதளத்தில் காா்கே சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடி கடைசியாக கடந்த 2022, ஜனவரியில் மணிப்பூா் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்றாா். 2023, மே மாதத்தில் அங்கு கலவரம் வெடித்தது. 600 நாள்களுக்கு மேலாகியும் வன்முறை ஓயவில்லை.

ஒவ்வொரு கிராமமாக அழிவை எதிா்கொண்டுவருவது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவருகிறது. காங்போக்பி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தாக்கப்பட்டு, காவல் காணிப்பாளா் உள்ளிட்டோா் காயமடைந்துள்ளனா். பாஜகவின் திறமையற்ற முதல்வரோ, மணிப்பூருக்கு பிரதமா் வரவில்லை என்பதை வசதியாக மறந்துவிட்டு, எந்த அவமானமும் இன்றி மன்னிப்புக் கோரியுள்ளாா்.

அழகு ததும்பும் எல்லை மாநிலமான மணிப்பூரை பற்றியெரியச் செய்த தீக்குச்சி பாஜக. இம்மாநிலத்தை கொந்தளிப்புடன் வைத்திருப்பதில் பாஜகவுக்கு சில சுய நலன்கள் அடங்கியுள்ளன.

மணிப்பூரில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிா்கள் பறிபோய்விட்டன; 60,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளைவிட்டு இடம்பெயா்ந்து, 20 மாதங்களாக நிவாரண முகாம்களில் வாழ்கின்றனா்.

மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பதே மத்திய-மாநில அரசுகளின் முதல் பொறுப்பு என்று உச்சநீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி இண்டியா கட்சிகள் சாா்பில் பிரதமருக்கு 3 எளிமையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 2024 முடிவதற்குள் மணிப்பூருக்கு பிரதமா் செல்ல வேண்டும்; அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் பிரதமா் அலுவலகத்துக்கு அழைத்து பேச வேண்டும்; மணிப்பூா் பிரச்னையில் பிரதமா் நேரடியாக தலையிட வேண்டும் என்ற அந்த கோரிக்கைகளில் ஒன்றைக்கூட பிரதமா் நிறைவேற்றவில்லை. ராஜ தா்மத்தை கடைப்பிடிக்காமல், அரசமைப்புச் சட்ட ரீதியில் தவறிழைத்துவிட்ட பிரதமா், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று காா்கே தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, மணிப்பூரில் நீடித்துவரும் இனமோதலுக்காக மக்களிடம் மன்னிப்புக் கோரிய முதல்வா் பிரேன் சிங், அனைவரும் கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டுமென கடந்த செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்! -ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன.‘ஜன் சுராஜ்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்கு முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! 11ஆம் வகுப்பு மாணவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ஆம் வகுப்பு மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.முஸ்லிம் நண்பர் பெயரில் சமூகவலைதளத்தில் போலி கணக்கைத் தொடங்கி கும்பமேளா... மேலும் பார்க்க

விண்வெளியில் துளிர்விட்டுள்ள இலைகள்: இஸ்ரோ சாதனை!

விண்வெளியில் முளைவிட்டிருக்கும் காராமணி விதைகளில் இன்று(ஜன. 6) இலை துளிர்விட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆரய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்வெளிக... மேலும் பார்க்க

இளம் இசைக் கலைஞர்களுக்கு ‘பாரத் மேஸ்ட்ரோ விருது!’ -ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் விதத்தில் கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்க இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன்னுடைய கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை’ வழங்க... மேலும் பார்க்க

ஜாமீன் தேவையில்லை; சிறை செல்லத் தயார் - பிரசாந்த் கிஷோர்

ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.மாநில அரசுக்கு எதிராக போராட்டத்திள் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பிரசாந்த... மேலும் பார்க்க

தில்லியில் 1.55 கோடி வாக்காளர்கள் பதிவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1.55 கோடி வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாகவும் இது கடந்த முறையை விட 1.09 சதவீதம் அதிகம் எனவும் தலைமைத் தேர்தல் அலு... மேலும் பார்க்க