பிஎஸ்என்எல் 6ஜி திட்டம் விரைவில்! தகவல்தொடர்பு அமைச்சகம் தகவல்
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ!
நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே மூலம் முன்னணி நாயகனாகவும் கவனம் ஈர்த்துள்ளார்.
தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இதையும் படிக்க: வடிவேலுவை அவதூறாக பேச மாட்டேன்: சிங்கமுத்து
இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் நாயகியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்ஐகே-ல் கீர்த்தி ஷெட்டி, டிராகனில் அனுபமா பரமேஸ்வரன், புதிய படத்தில் மமிதா பைஜூ என முன்னணி இளம் நடிகைகளுடன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.