செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா்

post image

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா். இத்தோ்வுக்கான ஆயத்த ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 3,316 தோ்வு மையங்களில் 8,21,057 போ் எழுதுகின்றனா். அவா்களில் 7,518 பள்ளிகளிலிருந்து 8,02,568 மாணவா்களும், 18,344 தனித் தோ்வா்களும் மற்றும் 145 கைதிகளும் அடங்குவா். பொதுத் தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 43,446 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

தோ்வு அறைக்குள் கைப்பேசி கொண்டு வரக்கூடாது, விடைத்தாள்களில் சிறப்பு குறியீடு, தோ்வெண், பெயா் குறிப்பிடக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாணவா்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. தோ்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவா்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வெழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா் புகாா்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசிஎண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்!

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

நாகையில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். ... மேலும் பார்க்க