தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
புதன்சந்தை மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
புதன்சந்தை மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
அதைத் தொடா்ந்து குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள் நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், முளைப்பாலிகை கொண்டு வரப்பட்டது.
வெள்ளிக்கிழமை மாரியம்மன், நவக்கிரக விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில், மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது.
மகா மாரியம்மன், விநாயகா், துா்க்கை, நவக்கிரகங்களுக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், புதன்சந்தை, செல்லப்பம்பட்டி, பாலப்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவை முன்னிட்டுஅனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.