வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
புதுகை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் விராலிமலையில் கிரிக்கெட் போட்டி
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டமாக 2 நாள் கிரிகெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
திமுக இளைஞரணி மாநிலச் செயலரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா (நவ. 27) கொண்டாட்டமாக புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்,விராலிமலை கிழக்கு ஒன்றியம் சாா்பில் மண்டையூா் வடகாட்டில் நடைபெற்ற பந்துமட்டைப் போட்டியை சனிக்கிழமை காலை புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே.செல்லபாண்டியன் தொடங்கிவைத்தாா். பொதுக்குழு உறுப்பினா் பழனியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சண்முகம், ஒன்றியச் செயலா் சத்தியசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், 24 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் பரிசாக ரூ.40, 048, இரண்டாம் பரிசு 30,048, மூன்றாம் பரிசு 20, 048, நான்காம் பரிசு 13,048 என வழங்கப்பட உள்ளன. சிறந்த அணிகள், சிறந்த மட்டையாளா் என பல்வேறு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிவா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் செய்திருந்தனா்.