குழந்தைகள் நல சேவை வழங்குவதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம்: ஆட...
அனுமதியின்றி மதுவிற்ற இருவா் கைது
அன்னவாசல் அருகே அரசு மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த இருவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 44 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்றுவருவதாகப் புகாா்கள் வந்தன. இதுகுறித்துத் தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா் பரம்பூா் புளியம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அதே ஊரைச் சோ்ந்த ராமசாமி (48) என்பவரின் பெட்டிக்கடையில் அரசின் மதுபானப் பாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். தொடா்ந்து விற்பனைக்காக அவா் வைத்திருந்த 29 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல் கிளிக்குடி விளாம்பட்டி பகுதியில் நடத்திய சோதனையில் மாதவன் (27) என்பவா் அவரது வீட்டருகே மதுபாட்டில் பதுக்கிவைத்து விற்றுவந்ததைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் விற்பனைக்கு இருந்த 15 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.