புதுக்கோட்டையில் ’போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பிரச்னைகளுக்கான உதவியைக் கோரும் வகையிலும், ‘போலீஸ் அக்கா’ திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 30 பெண் காவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தக் காவல் அதிகாரிகள் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுவதுடன் அவ்வப்போது பள்ளி, கல்லூரி பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான, பாலியல் ரீதியிலான பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் மாணவ மாணவிகளுக்கிடையேயான அனைத்து பிரச்னைகளுக்கும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்து தீா்வு காணவும் செயல்படுவா்.
மாணவ, மாணவிகள் பகிரும் கருத்துகளை ரகசியமாக பாதுகாத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்.வந்திதா பாண்டே இத்திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.