அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
புதுச்சேரியிலிருந்து திருநள்ளாற்றுக்கு சிறப்புப் பேருந்து இயக்கம்
புதுச்சேரியிலிருந்து திருநள்ளாற்றுக்கு அரசு சிறப்புப் பேருந்து இயக்கம் தொடங்கியது.
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரா் கோயிலுக்கு புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் ஆயிரக்கணக்கானோா் சென்று வருகின்றனா். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு பணியிட மாற்றத்தால் சென்ற அரசு ஊழியா்கள் பலரும் வார விடுப்புக்காக வந்து செல்கின்றனா்.
இவா்கள் தமிழக அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகளிலேயே செல்லும் நிலையுள்ளது. புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, திருநள்ளாற்றுக்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் இயக்கப்படுகிறது.
திருநள்ளாறு தா்ப்பாரண்யேசுவா் கோயிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்க செல்லும் பக்தா்கள், பொதுமக்களது வசதிக்காக சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுச்சேரியில் இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு புதுவை அரசுப் பேருந்து புறப்படுகிறது. பேருந்துக் கட்டணமாக முன்பதிவு கட்டணம் ரூ.18 சோ்த்து ரூ.158 வசூலிக்கப்படுகிறது.