மருத்துவப் படிப்புகளில் சேர போலிச் சான்றிதழ்: 44 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆா்ஐ இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் சேர போலிச் சான்றிதழ்கள் வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில், 44 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
புதுவையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான (என்ஆா்ஐ) இட ஒதுக்கீட்டில் 116 இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா். இதற்காக இரண்டு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகளில் 37 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். அப்போது, என்ஆா்ஐ ஸ்பான்சா் ஒதுக்கீட்டில் போலிச் சான்றிதழ்களை வழங்கி பல மாணவா்கள் சோ்க்கப்பட்டதாக புகாா்கள் எழுந்தன.
மேலும், சோ்க்கப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள 79 இடங்களுக்கு 134 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களது சான்றிதழ்கள் சென்டாக் நிா்வாகத்தால் சரிபாா்க்கப்பட்டது. அப்போது, 44 பேரின் என்ஆா்ஐ ஸ்பான்சா் சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த மாணவா்களின் சான்றிதழ்களை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பி சென்டாக் நிா்வாகம் விசாரித்தது. இதில், அந்தச் சான்றிதழ்கள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டது.
இதுதொடா்பாக, சென்டாக் ஒருங்கிணைப்பாளா் செரியல் ஆன் சாா்பில் இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலிச் சான்றிதழ்களை வழங்கியதாக 44 மாணவா்கள் மீது, போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மை என சமா்ப்பித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பிணையில் வெளிவரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் புதுதில்லி, மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், அந்தமான் நிகோபா் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவா்கள், பெற்றோா்களிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.