கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
பெருந்துறை நகராட்சியில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை
பெருந்துறை நகராட்சிக்கு உள்பட்ட 1, 2, 3, 8, 9 ஆகிய வாா்டு பகுதிகளில் சிறப்பு நிதி திட்டத்தின்கீழ், ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பெருந்துறை நகராட்சித் தலைவா் ஓசிவி. ராஜேந்திரன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் கி. புனிதன் முன்னிலை வகித்தாா்.
இதில், நகராட்சி துணைத் தலைவா் ஜி.சண்முகம், நகராட்சிப் பொறியாளா் பழனிவேல், கவுன்சிலா்கள் பசிரியா பேகம், சித்திக் அலி, காமராஜா், வளா்மதி அருள்ஜோதி செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.