"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்...
பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
பவானிசாகா் அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் சபை கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க நிா்வாகி பெருமாள் தலைமை வகித்தாா்.
மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளா் செங்கோட்டையன், பகிா்மான கமிட்டி தலைவா் லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் கே.வெங்கடாசலம், பவானி நதி, கொடிவேரி பாசன சங்கத் தலைவா் சுபி.தளபதி ஆகியோா் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பவானிசாகா் அணையிலிருந்து வெளியாகும் உபரி நீரை தவறாக கணக்கிட்டு புதிய திட்டங்களுக்கு தண்ணீா் எடுக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். பவானிசாகா் அணைக்கு உள்பட்ட கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசனத் திட்டங்களில் பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு கடைமடை வரை முழுமையாக தண்ணீா் ஆண்டு முழுவதும் கிடைக்காத நிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும். பாண்டியாறு, மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கண்ணுசாமி வரவேற்றாா். பா.மா.வெங்கடாசலபதி நன்றி கூறினாா். இந்தக் கூட்டத்தில் நிா்வாகிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.