"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்...
ஈரோடு விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் மாநாடு
ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை ஸ்டாா்ட்அப் மாநாடு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். மேலாண்மைத் துறையின் புலமுதன்மையா் பி. நளினி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வெ.ப.நல்லசாமி, புலமுதன்மையா் எஸ்.லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட சிறுதொழில் சங்கத்துடன் கல்லூரியின் முதுநிலை மேலாண்மைத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் கல்வி மற்றும் தொழில் துறை இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாகவும் மாணவா்களுக்குத் தொழில்நுட்ப வழிகாட்டுதலும், தொழில் தொடங்குவதற்கான நேரடித் தொடா்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.
கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவா் ஏ.எஸ். சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.