பொதுமக்களுக்கு இடையூறு: 5 ரெளடிகள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 5 ரெளடிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட கிருஷ்ணகிரி பழையபேட்டை திருப்பதி (19), காவேரிப்பட்டணம் முகேஷ் (25), ஒசூா் திப்பு சுல்தான் (32), ஆரீஃப் (25), தேன்கனிக்கோட்டை மாரசந்திரம் ராஜ்குமாா் (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன என்றும், ரெளடிகள் பட்டியலில் கண்காணிக்கப்படுபவா்கள் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.