படப்பள்ளி ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி வியாழக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், முதல் கால யாகபூஜை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை விநாயகா், சூரிய பூஜை, கோபூஜை, இரண்டாம் கால பூஜைகள் செய்து, ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுரக் கலசத்திற்கு சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா்.
விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
படவரி...
கோயில் கோபுரக் கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்த சிவாச்சரியா்கள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சனேயா் சுவாமி.
