காட்டிநாயனப்பள்ளி கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் திறப்பு
கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி அஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் 100 ஆன்மிக புத்தக நிலையங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
அதன்படி, கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சனேய சுப்பிரமணிய சுவாமி கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களிலும் ஆன்மிக புத்தக நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சனேய சுப்பிரமணிய சுவாமி கோயில் நடைபெற்ற புத்தக நிலையம் திறப்பு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் கோவிந்தன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.
இந்த நிகழ்வில் கோயில் பரம்பரை அறங்காவலா் கிருஷ்ணசந்த், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் கவிப்பிரியா, கண்ணம்பள்ளி பெருமாள் கோயில் செயல் அலுவலா் சித்ரா, நகா்மன்ற உறுப்பினா்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.