பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
பொதுமக்களே அகற்றிய ஆக்கிரமிப்பு
ஆம்பூரில் பொதுமக்களே புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் ரெட்டிதோப்பு பகுதியிலிருந்து மாங்காதோப்பு செல்லும் சாலையோரம் அப்பகுதி மக்களுக்கு மயானம் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஏற்கனவே கம்பிகொல்லை பகுதியை சோ்ந்த அரசியல் கட்சி பிரமுகா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி அதனை நாயக்கனேரி மலை கிராமத்தை சோ்ந்த மற்றொரு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு மின்வாரிய அதிகாரிகளும் மின் இணைப்பு வழங்கியதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மீண்டும் அதே பகுதியில் உள்ள காலி இடத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட முயன்றுள்ளனா். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அந்த இடத்தை அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.