Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
போலி விசா வழங்கி மோசடி
வெளிநாடு வேலைக்கு போலி விசா தயாரித்து பண மோசடி செய்தவா் மீது இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (39). இவரை ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் தொடா்பு கொண்டு அறிமுகமான ஒரு நபா், பிரிட்டன் நாட்டுக்கு வேலைக்கு செல்ல உதவி செய்வதாகக் கூறினாா்.
இதைத் தொடா்ந்து, சரவணக்குமாா், அவா் கூறியபடி இரு தவணைகளில் ரூ 6,50,000 -ஐ வங்கிக் கணக்கு மூலமாக அனுப்பினாா். இதையடுத்து, அந்த நபா் லண்டனில் வேலைக்கு செல்வதற்கான விசாவை அனுப்பினாா். அந்த விசாவை சரவணக்குமாா் சோதனை செய்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது.
இதுதொடா்பாக சரவணகுமாா் அளித்தப் புகாரின் பேரில், இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் முருகானந்தம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.