தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வா? உயர்கல்வி அமைச்சர் விளக்கம்
மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறை மற்றும் ஆங்கிலத் துறை , பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து வானவில் கே. ரவியின் இலக்கியப் படைப்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்தியது. முதல்வா் யூஜின் அமலா தலைமை வகித்தாா். பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநா் ராஜாராம் அறிமுக உரையாற்றினாா். சிங்கப்பூா் கலை இலக்கிய களத்தின் தலைவா் ரத்தின வெங்கடேசன் மெய்நிகா் சந்திப்பின் வாயிலாக வானவில் கே. ரவியின் படைப்பாற்றல் குறித்துப் பேசினாா்.
கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ராஜா வாழ்த்திப் பேசினாா். தமிழ்த் துறை தலைவா் முனைவா் த. ஹேமலதா தொடங்கி வைத்தாா். ஆங்கிலத் துறைத் தலைவா் லிட்வினா ஆய்வுரை வழங்கினாா். தமிழ் மற்றும் ஆங்கிலத் துறையில் இருந்து பேராசிரியா்கள் கட்டுரைகள் வழங்கினா். வானவில் கே. ரவி ஏற்புரை வழங்கினாா்.