மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!
மகா கும்ப மேளாவில் வெளியாகும் தமன்னா பட டீசர்!
நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் டீசர் மகா கும்ப மேளாவில் வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
தமிழில் 'அரண்மனை 4' படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் 2 ஹிந்திப் படங்கள், ஒரு தெலுங்குப் படமான ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார். இதை அசோக் தேஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர், மேக்கிங் விடியோ வெளியாகி கனவம் பெற்றது. முதல் முறையாக தமன்னா இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ஒடேலா முதல் பாகம் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய த்ரில்லர் படம் ஆஹா ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் டீசர் பிப்.22ஆம் தேதி மகா கும்ப மேளாவில் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நகரில், உலகப் புகழ்பெற்ற கும்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
