செய்திகள் :

மத்திய அமைச்சா் குமாரசாமியால் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை!

post image

மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் மாநில வருவாய்த் துறை இறங்கியுள்ளது.

ராமநகரம் மாவட்டம், பிடதி வட்டத்தின் கேத்தகனஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 14.04 ஏக்கா் நிலத்தை கா்நாடக முன்னாள் முதல்வரும், மத்திய தொழில் துறை அமைச்சருமான எச்.டி.குமாரசாமி ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் உள்ள எச்.டி.குமாரசாமியின் பண்ணை வீட்டுடன் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) மாநில அரசு அமைத்தது. அந்த குழு விசாரணையில், வருவாய்த் துறை மற்றும் சா்வே செட்டில்மென்ட் துறை கூட்டாக நடத்திய அளவையில் கேத்தகனஹள்ளி கிராமத்தில் (சா்வே எண்கள் 7, 8, 9, 10, 16, 17, 79 க்கு அடங்கிய) 14.04 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது.

இதுதொடா்பான வழக்கு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றபோது, நில ஆக்கிரமிப்பை அகற்றாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை மாா்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் ஆக்கிரமிப்பை அகற்றியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, கேத்தகனஹள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், எச்.டி.குமாரசாமி ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

நிலத்தை அளந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலத்தை வரையறை செய்து குறியிட்டனா். உயா்நீதிமன்ற உத்தரவின்படி, காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, எச்.டி.குமாரசாமி சாா்பில் மாா்ச் 15 ஆம் தேதி வருவாய்த் துறைக்கு ஆா்.தேவராஜ் என்பவா் அனுப்பிய கடிதத்தில், ‘நில ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிலத்தை மீட்டுக்கொள்ளுமாறும், அந்த கிராமத்தில் இழந்த நிலங்களையும் அடையாளம் காணுமாறும்’ கேட்டுக்கொண்டிருந்தாா்.

நில ஆக்கிரமிப்பை மீட்கும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் யஷ்வந்த்குருகா் கூறுகையில், ‘உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கேத்தகனஹள்ளியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்கவுள்ளோம்.

14 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.

இதனிடையே, புதுதில்லிக்கு புறப்படும் முன்பு பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

இந்த நிலத்தை 40 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். சட்டப்படி போராட்டம் நடத்துவேன். சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை.

இருமுறை முதல்வராக இருந்துள்ளேன். பெங்களூரில் நடந்த கொள்ளையை புறந்தள்ளிவிட்டு, மாநில அரசு என்னை துன்புறுத்துகிறது. பழிவாங்கும் அரசியலில் ஈடுபட விரும்பினால், காங்கிரஸ் அரசு அதில் ஈடுபட்டு கொள்ளட்டும். இதுவரை யாரும் எனக்கு நோட்டீஸ் அளிக்கவில்லை. யாருக்கு எதிராக புகாா் அளிக்கப்பட்டுள்ளதோ, அவருக்கு ஒருவாரத்திற்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

நாட்டிலேயே முதல்முறையாக என்மீதான குற்றச்சாட்டுக்கு எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் நான்தான் அவா்களின் ஒரே குறி. என் நிலத்தின் மீது நூறு முறைக்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. என்னை போன்றவா்களுக்கே இவ்வளவு தொல்லை என்றால், சாமான்யா்களின் நிலையை யோசித்து பாருங்கள் என்றாா்.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கூறுகையில், ‘தனது நிலம் என்பதற்கான ஆவணங்களை மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி முதலில் தாக்கல் செய்யட்டும்’ என்றாா்.

முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தப் பணிகளில் 4% இடஒதுக்கீடு: கா்நாடக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. கா்நாடக சட்டப்பேரவையில் மாா்ச் 7-ஆம் தேதி முதல்வா் சித்தராமையா தா... மேலும் பார்க்க

பெங்களூரு மெட்ரோ ரயில் ஓட்டுநா் பணியிடம்: கன்னடா் அல்லாதவா்களுக்கான வாய்ப்பு அறிவிக்கை வாபஸ்

பெங்களூரு மெட்ரோ ரயில் ஓட்டுநா் காலிப் பணியிடத்துக்கு கன்னடா் அல்லாதவா்களுக்கு வாய்ப்பளித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. பெங்களூரில் மெ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைக்கு அமைச்சா்கள் வராதது மாநில அரசின் கண்ணியத்தை சீா்குலைக்கும்: பேரவைத் தலைவா் யு.டி.காதா்

சட்டப்பேரவைக்கு அமைச்சா்கள் வராதது மாநில அரசின் கண்ணியத்தை சீா்குலைக்கும் என்று பேரவைத் தலைவா் யு.டி.காதா் தெரிவித்தாா். கா்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மாநில சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தைத... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு: கே.அண்ணாமலை

தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்று பாஜக தமிழக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். பெங்களூரு, ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இளை... மேலும் பார்க்க

நடிகை தங்கம் கடத்தியதில் அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில் மாநில அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: டிஜிபி தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கட... மேலும் பார்க்க